ஹாஸ்டல் படத்தின் கதை இதுதான் – பிரியா பவானி சங்கர்..!!
ஹாஸ்டல் படத்தின் கதையை நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் ஹாஸ்டல். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துளளார். மேலும் நாசர், முனீஸ்காந்த், ரவிமரியா, யோகி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற ‘அடி கப்பியரே கூட்டமணி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்த கதையை நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதில் அவர் பேசியது ” இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை கலந்த திகில் படம். குடும்பத்துடன் இந்த படத்தை பார்த்தால் இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். ஹாஸ்டல் படத்திற்காக கல்லூரிகளில் பெரிய செட் அமைத்து படத்திற்கான படப்பிடிப்பு எடுக்கப்பட்டது” என்றும் கூறியுள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள்முடிந்துள்ள நிலையில், படத்திற்கான மற்ற வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.