தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் மற்றும் கதை வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.இவரது நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அது மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் பேசுகையில் கூறியிருந்தார்.
விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் தான் SarkaruVaariPaata படத்தை இயக்குகிறார். மேலும் எஸ். எஸ். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிஎஸ். வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தை மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனமான GMB என்டர்டெயின்மெண்ட்டுடன் இணைந்து மைத்ரி மூவீ மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் ப்ளஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹீரோவின் அம்மாவுடன் பேங்கில் பணிபுரியும் ஊழியராக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் வங்கியில் மோசடி செய்து விட்டு இங்கிலாந்திற்கு தப்பி செல்லும் தொழிலதிபர், அவரை ஹீரோ எவ்வாறு இந்தியாவிற்கு அழைத்து வருவதும் தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு…