ஷூட்டிங்கை நிறுத்தி விஜய் கேட்ட பாடல் இதுதான்.! நடிகை வெளியிட்ட சூப்பர் தகவல்.!

Default Image

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவிகிருஷ்ணா,சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தார்கள் இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அணைத்து ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது என்றே கூறலாம். சிடி கேசட்கள் வாங்கி ரசிகர்கள் பாடல்களை கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் விஜய் மதுரை படத்தின் கண்டேன் கண்டேன் பாடல் படப்பிடிப்பின் இடைவெளியின் போது காரில் 7ஜி ரெயின்போ காலனி பாடலின் ஆல்பத்தை கேட்டு கொண்டிருந்ததாக சோனியா அகர்வால் கூறியுள்ளார்.

அடுத்ததாக விஜய் சோனியா அகர்வாலிடம் 7ஜி ரெயின்போ காலனி மிகவும் அருமையாக உள்ளது…யுவன் சங்கர் ராஜா உங்களுக்கு அற்புதமான ஆல்பத்தை கொடுத்துள்ளார்..இந்த ஆல்பம் மிகப்பெரிய ஹிட் ஆகும்” என கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் -யுவன் சந்தித்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியானது. பல ரசிகர்கள் இவர்களது காம்போவிற்கு காத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Rohit Sharma CT
Girl sexually harassed
Virat Kohli shubman gill
kumbh mela fire accident
Sexual Harassment - Pregnant Woman
Rohit - Suresh Raina