“சிங்கம்” கதாபாத்திரத்தில் மிரட்ட காத்திருக்கும் மக்கள் செல்வன்- ‘துக்ளக் தர்பார்’
விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படங்களில் ஒன்று துக்ளக் தர்பார். அறிமுக இயக்குனரான டெல்லி பிரசாத் இயக்கும் இந்தப் படத்தில் அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அரசியல் சம்பந்தப்பட்ட இந்த படத்தில் சிங்கம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். நல்ல காரியங்கள் எதுவும் செய்யாமல் மோசடி செய்த கொண்டு சுற்றும் விஜய் சேதுபதி எவ்வாறு அரசியல் நுழைகிறார் என்பதும், எப்படி நல்லவராக மாறுவார் என்பது தான் படத்தின் கதை. மேலும் இந்த படத்தில் பார்த்திபன் வில்லனாகவும், மஞ்சிமா மோகன் விஜய் சேதுபதியின் சகோதரியாகவும் , அதிதிராவ் ஹைத்ரி விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, மேலும் நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்