மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் நடந்து வந்தது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.
தற்போது ஊரடங்கு காரணமாக சிம்பு பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. சிம்புவின் அடுத்த படத்தை மிஷ்கின் இயக்க போவதாக தகவல் வெளியாகியது. மேலும் அந்த படத்தில் சிம்புவிற்கு வில்லனாக வைகை புயல் வடிவேலு நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்தது. இந்த நிலையில் தற்போது மிஷ்கின் இயக்கும் படத்தில் சிம்பு போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர் போலீஸ் வேடத்தில் நடித்த ஒஸ்தி, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. எனவே மிஷ்கின் மற்றும் சிம்புவின் கூட்டணியில் உருவாகும் இந்த படம் வெற்றியை பெறுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…