டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இது தானா..?
டாக்டர் வெளியாகும் தேதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு , வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி டாக்டர் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது டாக்டர் வெளியாகும் தேதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி, டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் 13-ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.