இந்த வாரம் குக் வித் கோமாளியில் புகழ் கலந்து கொள்ளாததற்கு காரணம் இதுதானா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் இந்த வாரம் கலந்து கொள்ளாததற்கு காரணம் அவர் படப்பிடிப்புக்கு சென்றது தான் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் மிகப் பிரபலமாக ஓடக்கூடிய நிகழ்ச்சி என்று இத்தனை நாட்கள் கூறிக் கொண்டிருந்தாலும், அந்த நிகழ்ச்சியையும் பின்னுக்குத்தள்ளி தற்பொழுது குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி மக்கள் மனதை கொள்ளையடித்து உள்ளது. சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு ஜாலியாக நடத்த முடியுமா என்பது இந்த நிகழ்ச்சியை பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் போல, அந்த அளவிற்கு நிகழ்ச்சி மக்கள் மனதை கவர்ந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடைபெற்றது, ஆனால், அதில் அதிக அளவில் மக்களால் விரும்பப்படுபவர்களில் ஒருவரான புகழ் வரவில்லை. புகழ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என பலரும் கேள்வி எழுப்பியதுடன், பல கருத்துக்களும் பாதிவிடப்பட்டு வந்தது. ஆனால் இந்த வாரம் புகழ் படப்பிடிப்புக்கு சென்று இருந்ததால் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் புகழ் அஜித்தின் வலிமை படம் மற்றும் சந்தானத்தின் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருவதால் அவர் அந்த படத்திற்கான படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.