சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமராக்கியதற்கு இது தான் காரணம்! – ஒபாமா
சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமராக்கியதற்கு இது தான் காரணம்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தன்னுடைய அரசியல் நினைவு குறிப்பான, ‘ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலம் (the promised land)’ என்ற புத்தகத்தில், இந்திய அரசியல் தலைவர்கள் குறித்து குறிப்பிட்டு உள்ளார்கள்.
அந்த புத்தகத்தில், காங்கிரஸ் அரசு 2009 முதல் 2014 வரை மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் இருந்தபோது, ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்தார். இது குறித்து ஒபாமா தனது புத்தகத்தில் 1990-களில் இந்தியா அதிக சந்தை அடிப்படையிலான பொருளாதாரமாக மாற்றியது. இது பெரிய பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டில் வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்திற்கும் வழிவகுத்தது. இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கான பிரதான காரணமாக பிரதமர் மன்மோகன் இருந்தார் என்றும், சீக்கிய மத சிறுபான்மையினரின் மிக உயர்ந்த பதவிக்கு உயர்ந்தவர் என்றும் ஊழல் குற்றசாட்டு இன்றி நற்பெயரை சம்பாதித்துள்ளார் என்றும் இந்த புத்தகத்தில் மன்மோகன் சிங் குறித்து புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் மன்மோகன்சிங்கிற்கு தேசிய அளவில் எந்த விதமான அரசியல் பின்புலமும் கிடையாது என்பதும், சோனியாவின் முடிவுக்கு காரணம் என எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தகுதியானவராக ராகுலை வளர்க்கும் சோனியாவின் திட்டமும், மன்மோகனை தேர்வு செய்த முடிவின் பின்னால் இருந்தது என அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.