புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்று சொல்வார்களே அதற்கு இதுதான் காரணம்.!!
நம்ம வீடுகளில் இருக்கும் முதியோர்கள் நம்மிடம் சில விஷயங்களை நாம் செய்கின்ற சில செயல்களை இது சரி இது தவறு என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். நாம் அவர்கள் சொல்வதை தவிர்ப்போம் ஆனால் அவர்கள் நம் மேல் உள்ள அக்கறை அதுமட்டுமில்லாமல் அவர்கள் அனுபவத்தால் சில செயல்களைத் தவிர்க்கச் சொல்கிறார். ஆனால் அவர்கள் என்ன சொல்வது நம்ம என்ன கேட்பது என்று இருப்போம்.
அதுபோன்று பிறந்த குழந்தைகளை புகைப்படம் எடுக்கிறார் என்று பெரியவர்கள் சொல்வார்கள் மீறி எடுத்தால் குழந்தையின் ஆயுள் குறைந்துவிடும் என்று மக்களை பயமுறுத்தி வைத்துள்ளார்கள்
பத்து மாசம் தாயின் கருப்பையில் வளரும் குழந்தை பிறந்து தாய்மடியில் வளர்ந்து பகல் இரவு வேலைகளைக் கண்களால் கண்டு வளர்ந்தாலும் குழந்தைகளை நேராக சூரியனைப் பார்க்க வைப்பதில்லை. ஏனென்றால் பிறந்த குழந்தைகளின் கண்களில் உள்ள கருவிழி பார்வைத்தன்மையை அதிக கதிர்வீச்சு கொண்ட சூரியக் கதிர்கள் கண்களை பாதித்து குழந்தைகளின் கண் பார்வையைப் செயல் இழக்கச்செய்துவிடும் என்று தான் அதற்கு காரணம் .
அக்காலத்தில் ஸ்டுடியோக்களில் குழந்தைகளை புகைப்படங்கள் எடுத்ததால் குழந்தைகளின் கவணம் சிதறக்கூடும், கண்பார்வை குறைபாடுகள் நிச்சயம் ஏற்படும் என்று நம் முன்னோர்கள் குழந்தைகளை இரண்டு வயது வரை புகைப்படம் எடுக்க விடுவதில்லை. இக்காலத்தில் வளர்ச்சியின் அடிப்படையில் ஸ்டுடியோவில் புகைப்படம் எடுப்பதுபோய் தற்போது வீடுகளில் ஸ்மார்ட் போன் குழந்தைகளின் சேட்டைகளை வீடியோவாக எடுக்கும் காலம் வந்துவிட்டது. இருந்தாலும் 2 வயது குழந்தகளை புகைப்படம் எடுப்பதை தவிர்ப்பது நன்று.