45 நிமிடம் செயல்படாததற்கு காரணம் இது தான் – காரணம் கூறிய கூகுள் நிறுவனம்!

Default Image

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக 45 நிமிடம் ஜிமெயில், யூடியூப் மற்றும் பிற சேவைகள் இயங்காததற்கு தனிநபரை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தான் காரணம் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக ஆல்பாபெட் இன்க் எனும் நிறுவனத்திற்கு சொந்தமான கூகுளின் முக்கிய செயலிகளான யூடியூப் மற்றும் ஜிமெயில் ஆகிய சேவைகள் 45 நிமிடம் உலகம் முழுவதிலும் செயல்படாமல் நின்றது. இதனால் இந்த செயலிகளை நம்பியுள்ள உலகிலுள்ள பல கோடிக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியத்துடன், காரணம் தெரியாமலும் தவித்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது கூகுள் நிறுவனம் இதற்கான காரணத்தை கூறியுள்ளது.

பாதிப்படைந்த அன்றே இது குறித்து தங்களின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில், இந்த ஜிமெயில் தளத்தில் ஏற்பட்ட பாதிப்பால் பலகோடிக்கணக்கானோர் அவதிக்குள்ளாக்குவார்கள் என்பதை அறிவோம், விரைவில் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி அமைக்கப்படும் எனவும் கூறியிருந்தனர், அதன் பின் 47 மணி நேரத்தில் மீண்டும் கூகுளின் அனைத்து செயலிகளும் வழக்கம் போல செயல்படத்துவங்கியது.

இந்நிலையில், தற்பொழுது இதற்கான காரணத்தை கூறிய கூகுள் நிறுவனம், அக்டோபர் மாதத்தில் பயனர்களின் விவரங்களை கணக்கிட்டதில், சில தவறுகள் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கூகுளின் பயனர்கள் 0 என கட்டியதாக தெரிவித்துள்ளது. மேலும், அதனால் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக 45 நிமிட கால செயலிழப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்