அஜித், விஜய் மற்றும் சூர்யா இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் இதுதான் – வனிதா

தர்ஷன் அவனது காதலியை ஏமாற்றுகிறான், நாளைக்கு ரசிகர்களை ஏமாற்ற மாட்டான் என்று என்ன நிச்சயம்.
தர்சன் மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள காதல் பிரச்சனை தற்போது பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா தர்சனின் இந்த செயலை வன்மையாக கண்டித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய வனிதா,தர்சன் தனது சுயமரியாதையை தானே கெடுத்துக் கொள்கிறான், சூர்யா அஜித் மற்றும் விஜய் ஆகியவர்கள் இந்த சினிமா துறையில் இவ்வளவு தூரம் வளர்ந்து எந்த களங்கமும் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களது மனைவிகள் மீது அவர்கள் வைத்துள்ள ஒரு உண்மை தன்மை தான்.
தனது குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்பவர்களை தான் ரசிகர்களும் நம்புவார்கள். தர்ஷன் அவனது காதலியை ஏமாற்றுகிறான், நாளைக்கு ரசிகர்களை ஏமாற்ற மாட்டான் என்று என்ன நிச்சயம் என ரசிகர்கள் நினைப்பார்கள் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025