குழந்தைகள் குறைபாடுடன் பிறக்க இது தான் காரணமாம்
குழந்தைகள் தான் நமது சிறந்த செல்வங்கள். அவர்களை பாதுகாப்பாகவும் ,உடல்நல குறைவுகள் ஏற்படமாலும் பெற்றேடுக்க வேண்டியது நமது முக்கிய கடமை. அவர்களை இந்த உலகில் எந்த விதமான குறைபாடுகளும் இல்லாமல் வளர்த்து எடுப்பது நமது தலையாய கடமையாகும்.
குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறந்தால் இந்த சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்து விடும். எனவே நாம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகள் எதனால் ஏற்படுகிறது என்பதனை என தெரிந்து கொள்வோம்.
குழந்தைகள் குறைபாடுடன் பிறக்க காரணங்கள்:
குழந்தைகள் பலர் மனவளர்ச்சி இல்லாமலும் ,குறைபாடுகளுடன் பிறப்பதற்கு பல காரணங்கள் உள்ளது.அந்த காரணங்கள் என்னென்ன என்பதை இந்த படிப்பில் இருந்து படித்தறியலாம்.
போலிக் அமிலம் :
கருவில் வளரும் குழந்தைகளுக்கு வைட்டமின் பி சத்து மிகவும் சிறந்தது. இது அவர்களின் உடலுக்கு மிகவும் ஊட்டம் அளிக்க கூடிய சத்துக்களில் ஒன்று.கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் போலிக் அமிலம் நிறைந்த மாத்திரைகளை எடுத்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.
கர்ப்பிணிக்கு வைட்டமின் பி-12 ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துகளில் குறைபாடு இருந்தால் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது.கீரை வகைகள் ,தானியங்கள் போண்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்
பயோட்டின் :
கருவில் வளரும் குழந்தைகளுக்கு பயோடின் எனப்படும் சத்து கிடைக்க வேண்டியது மிகவும் அவசியம்.இந்தக் குறைபாடு வளர்ந்தவர்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாவிடினும், கைக்குழந்தைகளில் குறைபாடான வளர்ச்சி, மற்றும் நரம்பியல் தொடர்பான குறைபாடுகளை ஏற்படுத்தும்.
பிறக்கும்போதே இருக்கக்கூடிய ஒரு வளர்சிதைமாற்றத் தவறான Multiple carboxylase deficiency இருப்பின், உணவு மூலம் பயோட்டின் தேவையான அளவில் உள்ளெடுக்கப்பட்டாலும், பயோட்டின் குறைபாட்டு விளைவுகளைத் தரும்.
மரபணுக்குறைபாடு :
மனிதகுலத்தை ஆட்டிப் படைக்கும் பாரிய Autism எனப்படும், மனக்குறைபாடு, மரபணுக்குறைபாடு, என்று கூறப்படும் நோய் உளநலத்தைப் பாதிக்கும் பிரச்சனையாகும்.
குழந்தையாக பிறக்கும் மனிதன் வாழ்நாள் முழுவதும் மழலையாகவும்,மனக்குறைபாடு உடையவராகவும் வாழ வேண்டிய சூழ்நிலைக்குத்தள்ளப்படுகின்றான். இந்த மரபணு குறைபாடு ஒரு காரணமாகும்.
இரத்தத்தின் அளவு குறைதல்:
இரத்தத்தின் அளவு குறைவாக இருந்தாலும் குழந்தைகளின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு குழந்தைகள் குறைபாடுடனோ அல்லது ஊனமாகவோ பிறக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும் இரத்தத்தில் உள்ள கால்சியம் மற்றும் இதரப்பொருள்களின் அளவு குறைவாக இருந்தாலும் குழந்தைகள் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
இரத்த சோகை இருந்தாலும் குழந்தைகள் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
மனஅழுத்தம் :
பெண்கள் முக்கியமாக கர்ப்ப காலங்களில் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எப்போதும் மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் பாதுகாத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இதனை செய்ய தவறினாலும் மனஅழுத்தம் ஏற்பட்டு குழந்தைகள் குழந்தைகள் ஊனமாக பிறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.