சுகமான இதமான காதல் ராகம் இதுதான் – குஷ்பு..!!
மாமனிதன் திரைப்படத்தின் முதல் பாடல் யூடியூபில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன் . இந்த திரைப்படம் சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார். இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி படத்தின் முதல் பாடலான தட்டி புட்டா தட்டி புட்டா என்ற பாடல் வெளியானது. வெளியாகி தற்போது யூடியூபில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை தொடர்ந்து நடிகை குஷ்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் பாடலை பார்த்து விட்டு “சுகமான இதமான காதல் ராகம் இதுதான்” என்று ட்வீட் செய்துள்ளார்.
சுகமான இதமான காதல் ராகம் இதுதான் ❤❤#Thattiputta first single from #MaaManithan hits 2M+ Views on YT & Trending on chart now.https://t.co/IIdoM2I4ru
Maestro #Ilaiyaraja & Young Maestro @thisisysr musical ???? @VijaySethuOffl @seenuramasamy @U1Records@YSRfilms @donechannel1
— KhushbuSundar ❤️ (@khushsundar) April 9, 2021