ரூ.29 கோடி பரிசு விழுந்த நபர் இவர்தான் ! ஒரு வழியாக கண்டு பிடிச்சிட்டாங்க!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி பிரபலம். இதில் பல இந்தியர்கள் டிக்கெட் வாங்கி பல கோடிகளை அள்ளியுள்ளனர். கடந்த மாதம் மான்குலூரை சேர்ந்த முகமாஸ் பயஸ் என்பவருக்கு லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு விழுந்தது.
இந்நிலையில், நேற்று நடந்த லாட்டரி குழுக்களில், இந்தியாவை சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் எனபவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசு விழுந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு, 28,86,62,884 கோடி ரூபாய் ஆகும்.
இந்த பரிசு விழுந்த நபரை தொடர்பு கொள்ள லாட்டரி நிருவத்தினர் முயன்று வருகினறனர். இவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறுகின்றனர். இந்த நபர் குறிப்பிட்டிருந்த நம்பருக்கு தொடர்பு கொண்டால், அது வேறு ஒரு நபருக்கு செல்கிறது. அவர் கொடுத்த மற்றோரு என்னை தொடர்பு கொண்டால், அவர் இங்கு இல்லை என்று பதிலளிக்கிறார்களாம். இதனையடுத்து, அந்த நபரை தேடும் பணியில் லாட்டரி நிறுவனம் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், ஸ்ரீனு சிறீதரன் நாயர் துபாயில் பணியாற்றி வந்துள்ளார். இவரது சம்பளம் 29 ஆயிரம் ரூபாய். ஸ்ரீனு தன்னோடு பணியாற்றும் 21 பேருடன் இணைந்து இந்த லாட்டரியை வாங்கியுள்ளார். இந்த 21 பேரில், 20 பேர் கேரளாவை சேர்ந்தவர். மற்ற ஒருவர் மட்டும் கர்நாடகத்தை சேர்ந்தவர்.
இந்நிலையில், இந்த 29 கோடி பரிசை, இந்த 21 பேரும் பிரித்தால் ஒவ்வொருவருக்கும் ரூ.1.32 கோடி கிடைக்கும். இதனையடுத்து இந்த நண்பர் குழு பரிசு விழுந்ததை வரும் வெள்ளிக் கிழமை கொண்டாட உள்ளார்களாம்.