4 வருசத்துல நான் பார்த்த ஒரே படம் இதுதான் – ராஜமௌலி.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான காதபத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
கொரோனா பரவல் குறைந்து திரையரங்குகள் திறந்தவுடன் மாஸ்டர் படம் வெளியாகி தியேட்டர் உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல திரையுலக சார்ந்த பிரபலங்களும் பாராட்டினார்கள்.
அந்த வகையில், பாகுபலி என்ற படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ராஜமௌலி மாஸ்டர் படம் குறித்து பேசியுள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமௌலியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்று நீங்கள் சமீபத்தில் பார்த்து உங்களுக்கு பிடித்த தமிழ் திரைப்படம் எது..? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜமௌலி, 4 வருஷமா எந்த படமும் பார்க்கவில்லை.. மாஸ்டர் படம் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது…அனிருத் மியூசிக் எனக்கு பிடித்தது..” என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.