விஜய் சேதுபதி அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் பூஜையுடன் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் லாபம் , துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர்,மும்பைகர் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது .இதன் பின் இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்,சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும்,அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.
இயக்குனர் பொன்ராம் தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும்,அது மார்ச் 23-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.காமெடி, ரொமான்ஸ்,ஆக்ஷன் என பல கோணங்களில் உருவாகும் இந்த படத்தினை குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் பூஜையானது மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும் ,அதனை தொடர்ந்து படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…