குழந்தைகளுக்கு கல்வியில் கவனம் குறைவதற்கான முக்கிய காரணங்கள் இது தான்
- குழந்தைகளுக்கு கல்வியில் கவனம் குறைவதற்கான முக்கிய காரணங்கள்.
பெற்றோர்களை பொறுத்தவரையில், குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் முக்கியத்துவம் செலுத்துவர். குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கு செல்லும் பருவம் வரும் போது, குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்கள் மிகவும் அக்கறை செலுத்த துவங்கி விடுகின்றனர்.
குழந்தை எதிர்காலத்தில் நல்லவராக வாழ்வதும் அல்லது தீயவராவதும் பெற்றோர்களின் வளர்ப்பில்தான் இருக்கிறது. அதே போல் குழந்தை நன்றாக படிப்பதற்கும் அல்லது படிப்பில் குறைந்த நாட்டம் இருப்பதற்கும் பெற்றோர்களே காரணமாகின்றனர்.
கணவன் – மனைவி பணி சுமை
குழந்தைகளை பொறுத்தவரையில் ஓர் குறிப்பிட்ட வயது வரை பெற்றோர்களின் அரவணைப்பில் தான் வளர வேண்டும். அவ்வாறு வளர்க்கப்படாத நிலையில், அவர்களது கல்வியில் கவனம் குறைந்து விடும். அதுமட்டுமல்லாமல், அவர்களது வாழ்க்கையும் நிலை தடுமாறி போவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது.
இந்த குறைபாடானது கல்வியில் துவங்கி, தொடர்ச்சியாக மனக்குறைப்பாடு, தாழ்வு மனப்பான்மை, மனசோர்வு, சக மாணவர்களை போல் இயல்பாக இருக்க இயலாத நிலை என பல்வேறு பிரச்சனைகளை கொடுக்கிறது.
இப்படிப்பட்ட பிரச்சனைகளை ஏற்படும் அதனை தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்.
ஆசிரியரின் பங்கு
குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில், ஆசிரியரின் பங்கு மிகவும் முக்கியமானது. சக மாணவர்களுடன் பழகும் தன்மை, ஒதுங்கும் மனப்பான்மை, கோபம், தகவல் பரிமாற்றம், புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம், ஒப்பிட்டு முடிவெடுக்கும் திறன் போன்ற பண்புகளில், குழந்தையின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
டிஸ்பிராக்சியா
குழந்தைகள் கல்வியில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கு காரணம். டிஸ்பிராக்சியா என்பது, ஒருங்கிணைப்பற்ற செல்கள், அதிக பயம், குறைந்த மொழி வளர்ச்சி, கல்வியில் போதுமான கவனமில்லாதிருப்பது, குழந்தை தூக்கத்தில் பிரச்சனை ஆகிய குறைப்பாடுகள் குறைபாடுகள் குழந்தைகளுக்கு காணப்பட்டால் அது டிஸ்பிராக்சியா என்று பெயர்.
ஒளி, ஒலி குறைபாடுகள்
இந்த குறைபாடுகள் குழந்தைகளிடம் இருப்பது குறித்து, ஆசிரியர்களால் மட்டுமே அறிய முடியும். புரிந்து கொள்ளும் திறன் குழந்தைக்கு எவ்வாறு இருக்கிறது என்று அறிந்தால், அவர்களது கல்வி திறன் எப்படிப்பட்ட நிலையில் உள்ளது என்பது பற்றி ஆசிரியர்களால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
டிஸ்கால்குலியா
மாணவர்களுக்கு எந்தெந்த செயல்பாடுகளில் பிரச்னை உள்ளது என ஆசிரியல்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். டிஸ்கால்குலியா என்பது குழந்தைகள் கணிதத்தை புரிந்து கொள்வதில் உள்ள பிரச்சனை ஆகும்.
வரிசைப்படுத்துவது, பெருக்குவது, வகுப்பது, சூத்திரங்களை புரிந்து கொள்வதில் பிரச்சினைகள் இருந்தால் அது டிஸ்கால்குலியாவின் அறிகுறியாகும்.