வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப் நிரந்தரமாக வசிக்கவுள்ள இல்லம் இதுதானாம்!

Default Image

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப், புளோரிடாவில்  பாம் பேச்சின் கரையோரத்தில் உள்ள ஒரு தீவில் உள்ள மார்-எ-லாகோ பண்ணை வீட்டில் வசிக்கவுள்ளார். 

கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் அமெரிக்க அதிபராக  ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ட்ரம்ப் தோல்வியை தழுவிய நிலையில், அமெரிக்காவின் அதிகார மையமான வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். இவர் 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பளம் மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், இவர் புளோரிடாவில்  பாம் பேச்சின் கரையோரத்தில் உள்ள ஒரு தீவில் உள்ள மார்-எ-லாகோ பண்ணை வீட்டுக்கு சென்றார். இப்போது இந்த வீட்டை தனது நிரந்தர குடியிருப்பாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றவாறு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தனது இறுதி நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்து பாம் பீச்சில் உள்ள  இல்லத்துக்கு லாரியில் பொருட்கள் வந்து இறங்கின என அப்பகுதி மக்கள் கூறியதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது.

இந்த  இல்லம் அமெரிக்க மக்களால் ‘குளிர்கால வெள்ளை மாளிகை’ என அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், நான்கு ஆண்டுகள் ட்ரம்ப் அதிபர் பதவியில் இருந்தபோது, குளிர்காலம் வரும் பொழுது எல்லாம் இந்த இல்லத்தில் தான் கணிசமான நேரத்தை செலவிடுவார். அதனால்தான் இந்த இல்லம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

மார்-எ-லாகோ இல்லமானது 20 ஏக்கர் பரப்பளவில் தோட்டத்துடன் கூடிய மாளிகையாக உள்ளது. இதில் 128 அறைகள் உள்ளது. 20,000 சதுர அடி பால்ரூம், ஐந்து களிமண் டென்னிஸ் கோர்டுகள், நீச்சல் குளம் என ஒரு பிரம்மாண்ட மாளிகையாக உள்ளது.  இந்த மாளிகை பார்ப்பவர்களுக்கு வியப்பை அளிக்கும் வண்ணம் உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த மாளிகை இன்னொரு சிறப்பு என்னவென்றால் மாளிகையிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலை நேரடியாகவும் பார்த்து ரசிக்கலாம். இது  புளோரிடா  மாநிலத்தில் உள்ள இரண்டாவது பெரிய மாளிகை என அழைக்கப்படுகிறது. இந்த மாளிகையின் மதிப்பு 160 மில்லியன் டாலர்களாக இருக்கும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்