இதுவே இந்த பிறந்தநாளுக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும் – கார்த்தி..!!
ஒவ்வொருத்தரும் அவரவர் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் எனக்கு தரும் பிறந்த நாள் பரிசு என்று ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிகர் அறிமுகமானவர் கார்த்தி. இந்த படத்திற்கு முன்பு ஆயுத எழுதி என்ற திரைப்படத்தில் முக்கியமான சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அவரது முதல் திரைப்படம் பருத்திவீரன் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தீரன், கைதி, போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சர்தார், மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் இன்று நடிகர் கார்த்தியின் 44 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ட்வீட்டர் கொண்டாடி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அவருக்கு பல பிரபலங்கள், ரசிகர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது ஒரு அறிக்கையை வெளிட்டுள்ளார். இந்த அறிக்கையில் ” அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்.!
இந்த கொரானா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது. அரசாங்கமும் மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி தம்பிகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருத்தரும் அவரவர் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் எனக்கு தரும் பிறந்த நாள் பரிசு” – ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள்! #Karthi | #HappyBirthdayKarthi| #HBDKarthi | @Karthi_Offl pic.twitter.com/3VCDPLzOvV
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 25, 2021