உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை – சுரேஷ் காமாட்சி

உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? என இயக்குனர் சுரேஷ் காமாட்சி ட்வீட்.
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மெகா தடுப்பூசி முகாம் மற்றும் வீடு தேடி தடுப்பூசி போடும் திட்டம் மூலம் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என்று, தமிழக பொது சுகாதார திட்டத்தில் திருத்தம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்களா என பள்ளி, கல்லூரி, கடைகள் மற்றும் சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திரையரங்குகள், பூங்காக்கள், மக்கள் கூடும் இடங்களில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்களா என சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.
உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்! https://t.co/UI7l5DpNKQ
— sureshkamatchi (@sureshkamatchi) November 22, 2021