“இதான் பாசிச பாஜக ஆட்சி” TTV தினகரன் சாடல்..!!
அமமுகவின் துணை பொது செயலாளர் TTV தினகரன் பாரதீய ஜனதா ஆட்சி ஒரு பாசிச ஆட்சி என்று தெரிவித்துள்ளார்.
சென்னை ,
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன், தனது தொகுதிக்குட் பட்ட தண்டையார்பேட்டை ரெட்டைக் குழி தெருவில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக பாசிச ஆட்சி என்று கோஷம் போட்ட தூத்துக்குடி மாணவி ஷோபியாவை உடனே கைது செய்த காவல்துறையினர், போலீசாரையும் நீதிமன்றத்தையும் அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். காவல்துறையின் பாதுகாப்புடன் எச். ராஜா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வருவதையும் கடுமையாக சாடினார். பெட்ரோல் விலை உயர்வு குறித்து தமிழிசையிடம் கேட்டவரை பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதுதான் பா.ஜனதாவின் பாசிச ஆட்சி. பொதுமக்களிடையே ஒற்றுமை இருக்கிறது. வடமாநிலத்தைப் போன்று இங்கும் இந்து-முஸ்லீம் இடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை. எனக்கு ஓட்டு போட்டதால் அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். ஜீவரத்தினம் தெருவில் ஆட்டோ கேஸ் கம்பெனி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாகவும் ஆர்.கே. நகர் தொகுதி புறக்கணிக்கப்படுவதால் மக்கள் பிரச்சனையை தீர்க்கக்கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.
DINASUVADU