உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் தினமும் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறது.
ஆனால், இதுவரை அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், டெக்ஸாமெதசோன்(Dexamethasone) என்ற ஸ்டீராய்டு மருந்துகளை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரின் உயிரை காப்பாற்றுவதாக பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
டெக்ஸாமெதசோன் மருந்து முன்பு கிடைத்து இருந்தால் 5000 பேரை காப்பாற்றியிருக்கலாம் என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்துள்ளனர். இந்த மருந்து மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முன்னேற்றம் அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 20 பேரில் 19 பேர் தொற்றிலிருந்து குணமடைகின்றனர். மேலும், அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு இதன் மூலம் பயனடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் மருத்துவமனைகளில் உள்ள 2,000 நோயாளிகளுக்கு டெக்ஸாமெதசோன் கொடுக்கப்பட்டது. அந்த மருந்து கொடுக்கப்படாத 4,000 நோயாளிகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தனர்.
வென்டிலேட்டரில் உள்ளவர்கள் இறப்பதற்கான வாய்ப்பை இந்த மருந்து 40 %-லிருந்து 28%- சதவிகிதமாகக் குறைக்கிறது. ஆக்ஸிஜன் தேவை உள்ள நோயாளிகள் இறப்பதற்கான வாய்ப்பை 25 %-லிருந்து 20 சதவிகிதமாகக் குறைக்கிறது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் கூறுகையில், இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கு இதுமட்டும்தான் மருந்தாக இருக்கிறது என தெரிவித்தனர்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…