பிஸ்கோத் படத்தில் சந்தானம் ராஜசிம்கா என்ற ராஜா கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து முடித்துள்ள திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தாரா அலிஷா மற்றும் சுவாதி முப்பலா நடித்துள்ளனர். மேலும் சௌகார், ஜானகி, ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை மசாலா பிக்ஸ் மற்றும் எம். கே. ஆர். பி. புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் சந்தானம் மூன்று கெட்டப்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு கேரக்டர் பிஸ்கட் தொழிற்சாலையில் பணிபுரியும் நபர் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஒரு பகுதியில் ராஜாவாக சந்தானம் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இயக்குநர், பிஸ்கோத் படத்தில் வரலாற்று காட்சிகள் 30நிமிடங்கள் வரை வரும் என்று கூறியிருந்தார். எனவே சந்தானம் 18ம் நூற்றாண்டில் வரும் ராஜசிம்கா என்ற ராஜாவாக நடித்துள்ளதாகவும் , அவருக்கு ராணியாக தாரா அலிஷா மற்றும் சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…