ரஜினியின் அண்ணாத்த படத்தில் நயன்தாரா ரஜினிக்கு மனைவியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு மகளாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். மேலும் நகைச்சுவை வேடங்களில் சூரி மற்றும் சதீஷ் நடிக்கவுள்ளனர்.டி. இமான் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் தீம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் 50% படப்பிடிப்புகள் மட்டுமே மீதமிருக்கும் இந்த படத்தின் கதை லீக்காகி உள்ளது. அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு மகளாக நடிப்பதாகவும், நயன்தாரா கீர்த்தி சுரேஷ்க்கு அம்மாவாக, அதாவது ரஜினிக்கு மனைவியாக நடித்துள்ளாராம். ரவுடியாக சுற்றி திரியும் ரஜினி, கோர்டில் வழக்கறிஞராக பணிபுரியும் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகவும், அதனையடுத்து வில்லன்கள் நயன்தாராவை கொல்ல, தனது மகள் கீர்த்தி சுரேஷை ரஜினிகாந்த் வளர்த்து வருகிறார்.
அதனை ரஜினியின் அத்தை மகள்களாக குஷ்பு மற்றும் மீனா நடித்துள்ளதாகவும், அவர்களது மகன்களை கீர்த்தி சுரேஷூக்கு திருமணம் செய்து வைக்க செய்யும் விஷயங்களை மையப்படுத்தி தான் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று…
சென்னை : பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நேற்று மாலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று…