‘இது எச்சரிக்கை மணி’ – அடுத்த 125 நாட்கள் மிக முக்கியமானவை : வி.கே.பால்
கொரோனாவிற்கு எதிரான போரில் அடுத்த 100 முதல் 125 நாட்கள் மிகவும் முக்கியமான நாட்கள் என்று வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனையடுத்து, நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று குறைந்து வருவது ஒரு எச்சரிக்கை மணி என்றும், கொரோனாவிற்கு எதிரான போரில் அடுத்த 100 முதல் 125 நாட்கள் மிகவும் முக்கியமான நாட்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐசிஎம்ஆர் ஆய்வின்படி, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்வதால், 95% கொரோனா மரணங்களை தவிர்த்துள்ளதாகவும், ஒரு டோஸ் தடுப்பூசி 85% கொரோனா மரணங்களை தவிர்த்துள்ளதாகவும், ஜூலை மாதத்திற்குள் 50 கோடி தடுப்பூசி என்ற இலக்குடன் முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.