கரக்ட் பாயின்ட் பேசுனா போயிருவாரு இதான் ரியோ .!தரமான கேள்விகளுடன் அனிதா .!

Default Image

சரியான கருத்துகளை முன் வைத்தால் இப்படி நான் ரியோ விலகி போவார் என்று கூறி ரியோவின் ஃபேவரிஸமிக்கு எதிராக பல கேள்விகளை அனிதா முன் வைக்கிறார்.

நேற்றைய தினம் புதிய மனிதா டாஸ்க்கிலும் ,வீட்டின் பிற செயல்களிலும் ஈடுபாடு குறைவாக விளையாடிய ஜித்தன் ரமேஷ் மற்றும் அனிதாவை ஓய்வு அறைக்கு அனுப்பியிருந்தார்கள் .இதற்கு அனிதா பல கேள்விகளை ஹவுஸ்மேட்களிடம் கேட்டார் . தற்போது வெளியான பர்ஸ்ட் புரோமோவில் ,அனிதா பல கேள்விகளை ரியோவுக்கு எதிராக கேட்டுள்ளார் .

அதில் நிஷா அவர்கள் அர்ச்சனாவின் தந்தையின் பெயரை இழுத்து அழ வைத்ததால் தான் அந்த டாஸ்க்கின் சுவாரசியம் குறைந்தது .அது உங்களுக்கு சுவாரசியம் குறைவாக தெரியவில்லை என்று அனிதா கூற அந்த ஐடியா கொடுத்தது நீ என்று ரியோ கூறுகிறார்.நிஷா அதே விஷயத்தை செய்தால் பிடிக்கலை என்றும் ,நான் அதே விஷயத்தை செய்தால் சுவாரஸ்யம் இல்லை என்று அனிதா கூற பிடிக்கவில்லை என்பதற்கும் , சுவாரசியம் குறைவு என்பதற்கும் வித்தியாசம் இருக்கு.அழ வைத்த நிஷா சிறப்பாக விளையாடியவர், வீட்டில் தனது கேப்டன் வேலையை சரியாக செய்த நான் சுவாரசியம் குறைவான போட்டியாளரா என்று அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைக்கிறார்.

அதற்கு ரியோ நான் கேப்டன்சி வைத்து சொல்லவில்லையே என்று கூற எல்லாத்தையும் சேர்த்து தான் சொல்லனும் ,வாரம் முழுவதும் நடந்ததை சேர்த்து வைத்து தான் சொல்ல வேண்டும் ,அப்போ நீங்க தப்பா சொல்லியிருக்கீங்க என்று அனிதா கூறும் அந்த இடத்திலிருந்து விலக செல்ல முயல்கிறார்.உடனடியாக அனிதா இப்படி தான் கரக்ட் பாயின்ட் பேசுனா போயிருவாரு இதான் ரியோ என்று கூறுகிறார் .மேலும் நீங்கள் நண்பர்களுக்காக மட்டும் தான் விளையாடுகிறீர்கள் என்று அனிதா கூற நான் அப்படி இல்லை என்று ரியோ கத்துகிறார் . நேருக்கு நேர் தைரியமாக ரியோ முன் பேசும் அனிதாவிற்கு தற்போது சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்