இது எங்கள் பிரச்சனை நாங்கள் பாத்துக்குறோம் தேவையின்றி தலையிடாதீங்க – ரஷ்யா
எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அரசின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி மீதுள்ள பழைய புகார்களின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அலெக்சி நவல்னியை விடுவிக்க கோரி ரஷியாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ரஷியா நாட்டு மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதையும், கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தவதற்கும் அமெரிக்கா ஆதரவாக இருப்பதாக அந்நாட்டு தூதர் ரெபெக்கா ரோஸ் தெரிவித்திருந்தார்.
இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே, எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னியை விடுவிக்க கோரிய போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 3500 பேரை காவல்துறை கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது சையது காலவரையின்றி சிறை தள்ளப்படுவார்கள் என அந்நாட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி கைதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும் வரும் நிலையில், தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தேவையின்றி தலையிடுவதாகவும், அரசுக்கு எதிராக மக்களை போராட தூண்டும் வகையில் நடந்துகொள்வதாகவும் கடுமையாக குற்றசாட்டியுள்ளது. மேலும் எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள் என்றும் நவல்னி கைது சர்ச்சையில் அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.