உங்களுக்கு தொப்பை வைக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம்! இனிமேல் இதை பண்ணாதீங்க!
இன்றைய நாகரீகமான உலகில், சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக பல முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். நாகரீகம் என்கின்ற பெயரில் இன்று நமது தமிழ் கலாச்சாரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
மேலை நாட்டு உணவுகளை உண்பது தான் இன்றைய சமூகத்தில் நாகரீகமாக தெரிகிறது. ஆனால், மேலை நாட்டு உணவுகளான பாஸ்ட்புட் வகை உணவுகள் அனைத்துமே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில்லை. மாறாக நமது உடலில் பல தீய விளைவுகளை தான் ஏற்படுகிறது.
நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று வைட்டமின் சி சத்துக்கள் தான். நம்மில் பலர் தங்களுக்கு தொப்பை வைப்பதை தடுப்பதற்காக உணவில் கட்டுப்பாட்டை கொண்டு வருகின்றோம். அதையும் தாண்டி காலையில் வாக்கிங் செல்வது, உடற்பயிற்சி செய்வது என பல காரியங்களில் ஈடுபடுகின்றோம்.
ஆனால், நமது உடலில் வைட்டமின் சி குறையும் போது தான் உடல் எடை அதிகரிக்கிறது. இதனால் தான் தொப்பையும் ஏற்படுகிறது. உடலில் வைட்டமின் சி குறையும் போது, உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நமது வயிற்றின் அடி வயிற்று பகுதியில் கொழுப்புகள் நிரந்தரமாக தங்கி தொப்பை விழ தொடங்குகிறதாக சில ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.