இது எனது இடமோ, டிரம்பின் இடமோ அல்ல – ஜோ பைடன் ட்வீட்.!
வெற்றியாளரை அறிவிக்க இது எனது இடமோ, டொனால்ட் டிரம்பின் இடமோ அல்ல – பைடன்
அமெரிக்கா அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 227 சபை ஓட்டுகளும், டிரம்ப் 204 சபை ஓட்டுகளும் பெற்றுள்ளனர். 270 ஓட்டுகளை பெற்றால் வெற்றி என்ற மேஜிக் நம்பரை நோக்கி முன்னேறுகிறார் ஜோ பைடன்.
இதனிடையே, ஜோ பைடன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், இந்தத் தேர்தலில் வெற்றியாளரை அறிவிக்க இது எனது இடமோ, டொனால்ட் டிரம்பின் இடமோ அல்ல. இது வாக்காளர்களின் இடம் என்று பதிவிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வரும் வரை ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும். நாங்கள் எங்கிருக்கிறோம் என்பதைப் பற்றி நாங்கள் நன்றாக உணர்கிறோம்.
மேலும் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம் என்று நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
It’s not my place or Donald Trump’s place to declare the winner of this election. It’s the voters’ place.
— Joe Biden (@JoeBiden) November 4, 2020