ரஷ்யாவை சேர்ந்த ரெய்ன் ஜார்டன் என்ற 24 வயது இளம் பெண் சூட்கேஸை திருமணம் செய்துள்ள சம்பம் பலரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
இன்று திருமணம் என்பது பல வினோதமான முறைகளில் எல்லாம் நடைபெறுகிறது. அந்த வகையில், ரஷ்யாவை சேர்ந்த ரெய்ன் ஜார்டன் என்ற 24 வயது இளம் பெண் சூட்கேஸை திருமணம் செய்துள்ள சம்பம் பலரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. ஜார்டானுக்கு சிறுவயது முதலே பொருட்களின் மீது ஈர்ப்பு உள்ளதாகவும், இந்த சூட்கேஸ் மீது தன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு ஒரு ஆண் மீது விருப்பம் இருந்தது. ஆனால் தற்போது சூட்கேஸ் மீது காதல் வயப்பட்டு உள்ளேன். அதனால் தான் அதனை திருமணம் செய்து கொண்டேன். மனிதர்களைவிட பொருட்களுடன் இருக்கும் போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய கணவனான சூட்கேஸை 2015ஆம் ஆண்டு முதன் முதலாகப் பார்த்தேன்.
ஒரு போட்டோ ஷூட்காக கடையில் அதை வாங்கினேன் என்றும் தெரிவித்தார். முதல் முறை பார்க்கும் போதே காதலில் விழுந்து விட்டேன். எனது கணவர் பெயர் ஜிடியான். நான் அவருடன் பேசுவேன். அவர் பேசுவதையும் நான் கேட்பேன். எங்களுக்குள் ஒரு ஆத்மார்த்தமான உரையாடல் நிகழும் என்றும், அவர் வெறும் துணை மட்டுமல்ல. நல்ல கணவர். நல்ல நண்பர். ஆனால் மக்கள் பலர் என்னை புரிந்து கொள்ளவில்லை. நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் சிகிச்சை எடுக்கவேண்டும் என்றும் கூறுகின்றனர். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் உங்களுக்கு புரியாத ஒன்றை வைத்து மனிதர்களை தீர்மானிக்க கூடாது.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…