லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் தயாரிக்கும் படத்தை தான் இயக்க போவதாக கூறப்படுகிறது.
மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்,பிளாக் பஸ்டர் ஹிட்டான கைதி படத்தின் மூலம் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். சிறிய பட்ஜெட்டில் பிளாக் பஸ்டர் படங்களை கொடுப்பவர். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் கோலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டரை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் ஒன்றை இயக்க போவதாகவும், ‘தலைவர்169’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி லோகேஷ் தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்சரண் அவர்களை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் அதனை மைத்ரி மூவீ மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.
தற்போது வரை அடுத்த படம் எதுவென்று தெரியாத இருந்த நிலையில், அவரே தனது அடுத்த படம் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பரில் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளாராம். மேலும் லோகேஷ் கனகராஜ் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…