“இது வேற விளையாட்டு” நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் மார்ச் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார். தற்போது தனுஷின் இரு படங்களை இயக்கி வரும் இவரது இயக்கத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் திரைப்படம் தான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.
திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியயை இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஆம், இந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் மார்ச் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இந்த படத்தை பார்க்க காத்துள்ளார்கள்.
Thank you all for your patience ????#நெஞ்சம்மறப்பதில்லை from March 5 – in THEATRES ????️
*இது வேற விளையாட்டு*@iam_SJSuryah @thisisysr @ReginaCassandra @Madan2791 @Nanditasweta @EscapeArtists_ @Rockfortent @kbsriram16 @Karthikravivarm @APVMaran @RIAZthebosshttps://t.co/D3VbokXe04— selvaraghavan (@selvaraghavan) February 8, 2021