சேரனின் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் இது தானாம்.!

Default Image

சேரனின் வாழ்வில் மறக்க முடியாத சம்பவத்தை பற்றி தனது டிவிட்டரில் கூறியுள்ளார். 

ஆட்டோகிராப் என்ற படத்தை இயக்கி நடித்து தேசிய விருது பெற்றவர் சேரன். தன்னுடைய படங்களின் மூலம் பெண் கதாபாத்திரங்களை மென்மையாக காண்பித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். அதனையடுத்து பட வாய்ப்புகள் வராத நிலையில், தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டு பிரபலமானார். ஆம் ரசிகர்கள் அனைவராலும் தற்போது சேரப்பா என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.அதன் பிறகு, கடந்தாண்டு இவரது இயக்கத்தில் வெளியான திருமணம் என்னும் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் தேசிய விருது பெற்ற திரைப்படமான ஆட்டோகிராப் படத்தை குறித்து மறக்க முடியாத சம்பவத்தை கூறியுள்ளார் சேரன்.2004ல் சேரன் இயக்கி வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். இதில் கோபிகா, சினேகா, மல்லிகா பலர் சேரனுடன்நடித்திருந்தார்கள் . இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் சென்னையிலுள்ள தேவி பாரடைஸ் தியேட்டரில் 2004ல் ஆட்டோகிராப் படத்தின் டிக்கெட்டை பகிர்ந்தார். அதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்த சேரன், இந்த டிக்கெட்டின் கதை, முதலில் தேவி கலாவில்(சிறிய தியேட்டர்) மட்டுமே திரையிட அனுமதி கிடைத்தது.

இரண்டாவது வாரம் தேவிபாலாவிலும் இடம் கிடைத்தது. மூன்றாவது வாரம் தேவி பாரடைஸ் (பெரிய தியேட்டர்)ம் சேர்ந்து மூன்றிலும் படம் ஓடியது. நான்காவது வாரம் முதல் தேவியிலும் திரையிட்டார்கள். நான்கு திரையரங்கிலும் ஆட்டோகிராப் மட்டுமே மூன்று வாரங்கள் ஓடியது. பின்னர் ஒவ்வொன்றாக குறைத்து 100நாட்களுக்கு மேல் ஓடியது. சிட்டியில் ஆட்டோகிராப் திரையிட்ட நிறைய திரையரங்குகள் இதே முறையை பின்பற்றின. அது ஒரு மறக்க முடியாத சம்பவம் என் வாழ்வில் என்று சேரன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்