குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுத்துவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாம்
குழந்தைகள் தான் நம்முடைய மிகபெரிய செல்வங்கள் அவர்களுக்கு எந்த நோய் வந்தாலும் நம்மால் தாங்க முடியாது.சுத்தமாக இருக்கும் பழக்கம் நம்மிடம் இருந்தால் அது பல வகையான நோய்களை நமது குழந்தைகளுக்கு வராமல் பார்த்து கொள்ளலாம். மேலும் நம் குழந்தைகளை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க சுத்தம் மிகப்பெரிய கவசமாக பயப்படுகிறது.
இருப்பினும் கை வழியாகத்தான் பல நோய் தொற்றுகள் ஏற்படுவதாக ஒரு ஆய்வின் முடிவில் இருந்து கண்டறிய பட்டுள்ளது.மேலும் எவ்வாறு அந்த பிரச்சனைகளில் இருந்து நமது குட்டி செல்லங்களை பாதுகாக்கலாம் என்பது பற்றிய தகவல்களை இந்த பதிப்பில் இருந்து படிப்போம்.
நோய்த்தொற்றுக்கான முக்கிய காரணம் :
நோய் தொற்று குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் அது அவர்களின் கைகள் சுத்தமில்லாமல் இருப்பது தான். அவர்கள் விளையாட்டு குணத்தால் சுத்தத்தை கடைபிடிப்பது இல்லை.மேலும் அவர்களுக்கு எந்த இடங்களில் நோய் கிருமிகள் அதிகமாக இருக்கும் என்பது கூட தெரியாது.
பல இடங்களிலும் விளையாடி விட்டு கைகளைக்கழுவாமல் அப்படியே உணவு உட்கொள்வது.இத்தகைய பழக்கத்தினால் நாளடைவில் பல நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். அவர்களை நாம் சுத்தம் ,சுகாதாரம் ஆகிய இரண்டிலும் இருந்து சரிவர பாதுகாத்தாலே அவர்களை நாம் நோய் அண்டாமல் பாதுகாக்கலாம்.
குழந்தைகளை நோய் தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம் :
குழந்தைகளை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதற்கான எளியவழி சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறை சென்று வந்த பின்பும் கைகளை நன்கு சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும்.
ஒருகுழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கு சத்தான உணவு எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு சுகாதாரமாக இருப்பதும் மிகவும் அவசியம். கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் குழந்தைகள் 50% பயரியா மற்றும் நிமோனியாவில் இருந்து பாதுகாக்கபடுகிறார்கள்.
தவிர மஞ்சள்காமாலை ,வயிற்று பூச்சிகள்,பன்றி காய்ச்சல்,எபோலா,தோல் மற்றும் கண் சம்பந்த பட்ட நோய்கள் நமது குழந்தைகளை நெருங்குவதில்ல்லை.
ஆய்வு:
சுத்தமில்லாத கையில் ஒரு கோடி வைரஸ்களும்,10 லட்சம் பாக்டீரியாக்களும் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.மேலும் வயிற்று போக்கு ,ஜலதோஷம், வாந்தி, மயக்கம்,குடல்புண்ஆகியவை 80 சதவிகித தொற்று நோய்கள் ஏற்படுவதற்கு கைகளின் சுத்தமின்மையே காரணம் என்று பல ஆய்வுகள் கூறுகிறது.
குழந்தைகளுக்கு நோய்த்தொற்றமால் இருக்க கடைபிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள்:
குழந்தைகள் கழிப்பறையை உபயோகபடுத்திய பின்பு நன்கு சோப்பை பயன்படுத்தி கைகளின் விரல் இடுக்குகளில் தேய்த்து நன்கு கழுவ வேண்டும்.இடது கட்டை விரலைகொண்டு வலது கைகளையும்,வலது கட்டை விரல்களை கொண்டு இடது கைகளையும் நன்கு கழுவ வேண்டும்.
கைகளை கழுவுவதற்கு சோப் மற்றும் கிருமி நாசினிகளை பயன்படுத்தலாம்.கைகளை கழுவிய பின்பு ஈரத்தோடு அப்படியே விட்டு விட கூடாது.கைகளை டவல் (அ ) மிருதுவான துணிகளை பயன்படுத்தி துடைக்க வேண்டும்.
குறிப்பாக 1 டவலை மூன்று முறைகளுக்கு மேல்பயன்படுத்த கூடாது. அடுத்தவர்களின் டவல்களையும் பயன்படுத்த கூடாது.
வாரம் ஒருமுறை அவர்களின் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் முக்கியம்.நோய் தொற்று ஏற்படுவதற்கு ஒரு மிக முக்கிய காரணமும் நகங்கள் தான் அவற்றின் வழியாக அதிக அளவு கிருமிகள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலும் குழந்தைகள் செல்ல பிராணிகளுடன் விளையாடும் போது மிகவும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். செல்ல பிராணிகளுடன் விளையாடிய பிறகு அவர்களின் கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்த வேண்டும்.