பீகார் மாநிலம், முசார்பர்பூர் ரயில் நிலையத்தில் இறந்துபோன தாயை தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என நினைத்து எழுப்ப முயற்சிக்கும் குழந்தையின் வீடியோ ஒன்று, பார்ப்போரின் கண்களை கலங்கவைக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான வெளிமாநில மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலையின்றி திண்டாடி வருகின்றனர். இதனையடுத்து பல தொழிலார்கள், தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர்.
தெலுங்கானாவில் ஒரு ‘ சுர்ஜித் ‘ 120 அடி ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை
இதனை கவனித்த மத்திய, மாநில அரசு வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைக்கும் விதமாக, அவர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்தது. அதில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். ஆயினும், சிலர் நடந்தே தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் பீகார் மாநிலம், முசார்பர்பூர் ரயில் நிலையத்தில் 23 வயது பெண், புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ரயில்மூலம் தன குடும்பத்தினருடன் குஜராத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை பீகார் வந்தடைந்தார். இதையடுத்து, அப்பெண் ரயில்வே நிலைய பிளாட்பாரமில் போர்வையால் மூடிய நிலையில் இறந்து கிடந்தார். தன தாய் இறந்தது கூட தெரியாமல், அவரின் மேல் இருந்த போர்வையை அப்பெண்ணின் குழந்தை இழுத்து, எழுப்ப முயற்சி செய்யும் வீடியோ, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வெளியாகி, காண்போரின் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.
கடுமையான வெயில், போதிய உணவு, குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததே அவர் இறந்ததற்கு காரணம் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அந்த வீடியோ, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…