சிறு அசைவுகளையும் கவனித்து ஆடிய ரசிகன்.! அப்பனுக்கு பெருமை என்று ட்வீட் செய்த கமல்.!

Published by
Ragi

உலகநாயகன் கமல்ஹாசன் பாடலுக்கு அச்சுஅசலாக நடனமாடிய ரசிகரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல்ஹாசன், இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு . அதிலும் இவரது நடனத்திற்கு மட்டுமே ரசிகர்களாக உள்ளவர்களும் உண்டு. இவர் நடிப்பில் வல்லவன் மட்டுமில்லாமல் நடனத்திலும் சகலகலா வல்லவன் . நாட்டுப்புற நடனம் தொடங்கி, பரதம், கதக் உள்ளிட்ட அனைத்து கலைகளையும் பிச்சு மேய்ந்தவர் உலகநாயகன். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவரது ரசிகர் ஒருவர் ‘அண்ணாத்த ஆடுகிறார் ஒத்திக்கோ’ பாடலுக்கு அவரை போன்றே நடனமாடி அசத்தியுள்ளார். பார்ப்பதற்கு சிறிது கமல்ஹாசன் அவர்களை போன்றுள்ள அவரது வீடியோவை பார்த்த உலகநாயகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்றடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுகிறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!  

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

15 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

16 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

18 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

19 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

19 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

2 days ago