“I AM WAITING ” தளபதி விஜய்யுடன் மோத காத்திருக்கும் துப்பாக்கி வில்லன்..!!
தளபதி 65 படத்தில் நடிக்க காத்திருப்பதாகவும், ஆனால் தான் நடிப்பது உறுதியாகவில்லை என்றும் வித்யூத் ஜம்வால் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பல நடிகர்கள் பெயர்கள் அடிபட்டு வருகிறது. குறிப்பாக துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் நடிப்பதாக தகவல் பரவி வந்தது. இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ” நான் காத்திருக்கிறேன் ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என்று தெளிவாக வதந்திகளுக்கு முறுப்புள்ளி வைத்துள்ளார்.
I AM WAITING ????,and would love to..
But this news is false???? https://t.co/OCpF6U4DEY— Vidyut Jammwal (@VidyutJammwal) April 2, 2021