கைகளால் உழைத்து சம்பாதித்தவர்களை பார்த்தீர்கள்.. கால் புகைப்படத்தை வைத்து மாதத்திற்கு 2.9 லட்சம் சம்பாதித்தவரை பார்த்தீர்களா!
அமெரிக்காவை சேர்ந்த ஜேசன் ஸ்டார்ம் என்பவர், தனது கால்களின் புகைப்படங்களை விற்பனை செய்வதன் மூலம் மாதத்திற்கு 2.9 லட்ச ருபாய் சம்பாதிக்கிறார்.
மக்கள் அனைவருக்கும் தங்களின் வேலையை தவிர்த்து, மற்றொரு வேலை செய்து, கூடுதலாக பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். அதற்காக பல செயல்கள் செய்து வருகின்றனர். சில நேரங்களில் அது பயனுள்ளதாக அமைந்தால், தாங்கள் செய்யும் வேலையை விட்டுவிட்டு இதனை முழுமையாக செய்து வருவார்கள்.
அதில் ஒருபங்காக, யூ-டியுப் போன்ற சமூக ஊடகங்களில் எளிதாக பணம் சம்பாதிக்க பல வழிமுறைகள் உள்ளனர். நீங்கள் ஒரு உணவு பிரியராக இருந்தால், அதனை விடியோவாக பதிவு செய்து, அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
மேலும் மக்கள் சிலர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சில வினோதமான செயல்களைச் செய்து, அதன்மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர். அந்தவகையில் அமெரிக்கா, அரிசோனா மாநிலத்தில் வசித்து வரும் 35 வயதாகும் ஜேசன் ஸ்டார்ம், தனது கால் புகைப்படங்களை விற்பனை செய்வதன் மூலம் ஒரு மாதத்திற்கு 4,000 டாலர் (அதாவது ரூ. 2.9 லட்சம்) வரை சம்பாதித்து உள்ளார்.
ஜேசன், தனது கால்களின் புகைப்படத்தை மட்டுமே பதிவிடுவதற்காக, ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கினார். தற்பொழுது அந்த பக்கத்தை 4,900- க்கும் மேற்பட்ட பின்தொடர்ந்து வருகின்றனர்.