"இந்த விளையாட்டால் தான் உங்க அடையாளமே மாறப்போகிறது" அனல் பறக்கும் வசனங்கள்..! பிகில் ட்ரைலர் ..!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து உள்ள திரைப்படம் “பிகில்”. இப்படத்தில் நயன்தாரா மற்றும் விவேக் ஆகிய பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார்.
இப்படத்தின் போஸ்டர் மட்டுமே படக்குழு வெளியிட்ட இருந்த நிலையில் படத்தின் ட்ரைலர் அல்லது டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.அப்போது படக்குழு அறிவிப்பு ஒன்றை அறிவித்தது. அதாவது 12-ம் தேதி இன்று ட்ரைலர் வெளியிடுவதாக அறிவித்து இருந்தது.
அதன் படி இன்று படக்குழு மாலை 6 மணிக்கு “பிகில்” திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டது.இப்படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வயதான தோற்றத்திலும் , இளமை தோற்றத்தில் நடித்துள்ளார்.
வயதான கதாபாத்தில் ராயப்பனாகவும் , இளமை கதாபாத்தில் பிகில் , மைக்கல் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மைக்கல் கதாபாத்திரத்தில் விஜய் ரவுடியாகவும் , பிகில் கதாபாத்திரத்தில் கால்பந்து வீரராகவும் நடித்து உள்ளார்.
இதனால் விஜய் பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக செய்கிறார்.அப்போது விஜய் மைதானத்தில் 10-திற்கும் மேற்பட்டவர்களுடன் பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக செல்கிறார். பெண்கள் அணி இருக்கும் அனைவரும் விஜய்க்கு குட் மார்னிங் சார் சொல்ல. இந்துஜா பொறுமையாக குட் மார்னிங் சொல்கிறார்.
இதனால் விஜய் கேட்கல கேட்கல என விஜய் கூற பிறகு சத்தமாக இந்துஜா குட் மார்னிங் சொல்கிறார். ஓய்வு அறையில் இந்துஜா வீரர்களிடம் பார்க்க ரவுடி மாதிரி இருக்காரு இவரு கோச்சா என சொல்கிறார்.
அதற்கேற்ற விஜய் பிகில் கதாபாத்திரத்தில் சைக்கிள் செயினை எடுத்து சண்டையிடும் காட்சி உள்ளது. முதுமை தோற்றத்தில் விஜய் ஒரு காரில் இருக்கும் போது அவரை சுற்றி பலர் ரவுடி வந்து “பெருசு தனியாருக்கு போடலாமா என சொல்ல விஜய் போடலாம்” என கூறுகிறார். இதை பார்க்கும்போது ஒரு முதுமைத் தோற்றத்தில் இருக்கும் விஜய். ராயப்பன் என்ற பெயரில் ஏரியாவில் ரவுடியாக உள்ளார்.
மற்றொரு காட்சியில் சர்ச்சில் விஜயும் , நயன்தாரா திருமண கோலத்தில் உள்ளனர். நயன்தாரா ரொம்ப ஆக்ஷன் ஆகிட்ட பிகிலு காதலுக்கு மரியாதை இல்ல உனக்கு மறந்து போச்சு என நயன்தாரா கூறுகிறார்.
மேலும் இந்த ட்ரெய்லரில் பிரீட் ஆஃ தே நேஷன் என்ற வசனம் இடம் பெற்றுள்ளதால் விஜய் இந்திய அளவில் புட்பால் வீரராக இருப்பார் என சொல்லப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025
ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…
February 28, 2025