தளபதி படத்தில் நடிப்பதற்காக தர்பார் படத்தின் வாய்ப்பையே மறுத்து விட்டாராம் இந்த பிரபல நடிகை !

நடிகை இந்துஜா கோலிவுட் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகை.இவர் தற்போது விளையாட்டு வீராங்கனையாக “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடை பெற்றது.
இந்நிலையில் நடிகை இந்துஜா இந்த படத்தில் நடிப்பதற்காக அவரது முடியை வெட்டி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி நடித்துள்ளார். இதையடுத்து நடிகை இந்துஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் , தளபதியின் பிகில் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது “தர்பார்” படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். அந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார் இந்துஜா.