90 நிமிடங்களில் கொரோனா இருப்பதை துல்லியமாக கண்டுபிடிக்கும் முகக்கவசம்..!
கொரோனா இருப்பதை துல்லியமாக 90 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் வகையில் அமெரிக்க ஹார்ட்வர்ட் பல்கலைக்கழக அறிஞர்கள் நவீன முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரிசோதனையை முகக்கவசம் வாயிலாக அறிந்துகொள்ளும் வகையில் புதிய தொழிநுட்பத்துடன் மாஸ்க் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவின் ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.
மேலும், இந்த முகக்கவசம் அணிந்து கொண்டு 90 நிமிடங்களிலேயே சுவாசம் மூலமாக கொரோனா இருப்பதை அறிந்துகொள்ள முடியும். மேலும், இந்த பரிசோதனை முடிவுகள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை போன்று துல்லியமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த முகக்கவசத்தில் ஒரு பட்டன் இருக்கும் என்றும் அதை அணிந்து கொள்பவர் அழுத்திய 90 நிமிடங்களில் சுவாசத்தில் கொரோனா உள்ளதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
மேலும், அந்த மாஸ்க்கை உங்களுடைய ஸ்மார்ட்போனுடன் இணைத்து விட்டால், அதில் உங்களுடைய முடிவுகளை எளிமையாக தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளனர். இந்த பரிசோதனை முடிவு ஆர்.டி.பி.சி.ஆர். முடிவை போல துல்லியமாக இருப்பதாகவும், விலை மலிவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.