தமிழில் இந்த இயக்குனர் படத்தில் நடிக்க தான் ஆசையாம்- மாளவிகா மோகனன் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது மாறன் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 11-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த நிலையில் தற்போது சமீபத்தில் பேட்டி அளித்த மாளவிகா மோகனன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் தமிழிலில் எந்த இயக்குனருடன் பணிபுரிய ஆசை என்ற கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன்… வெற்றி மாறன் சார் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் .. அவருடைய படத்தில் நடிக்க ஆசை “என்று கூறியுள்ளார்…தமிழில் எந்த திரைப்படம் பிடிக்கும் என்ற கேள்விக்கு “இருவர்” என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025