கடன் பிரச்சனைகளை தீர்க்கும் திருசேறை உடையார் சிவன் கோவில் சிறப்புகள்!
- கடன்களை திங்கள் கிழமைகளில் வாங்க வேண்டும். செவ்வாய்கிழமைகளில் திருப்பி கொடுக்க வேண்டும்.
- கடன் சுமை குறைய கும்பகோணம் – திருவாரூர் இடையே ஒரு திருத்தலத்தில் அருள்பாலிக்கும் திருசேறை உடையார் ஆலயத்திற்கு சென்று வரவேண்டும்.
தற்காலத்தில் கடன் இல்லாத நபரை பார்ப்பதே மிகவும் அரிதான விஷயம் ஆகிறது. ஏனென்றால் நமக்கு தற்போது லோன் என்கிற பெயரில் நம் அனாவசிய தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய சூழலை உருவாக்கி வைத்து விடுகிறார்கள். அதனால், சில நேரம் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். அத்தியாவசிய தேவைகளை மட்டும் கருத்தில் கொண்டு அனாவசிய தேவைகளை மறந்து வருமானத்துக்கு தகுந்தாற்போல் செலவு செய்தாலே கடன் சுமையை வெகுவாக குறைத்துவிடலாம்.
கடன்களை வாங்கும்போது திங்கட்கிழமைகளில் வாங்க வேண்டும். அதேபோல் கடனை திருப்பி செலுத்துகையில் செவ்வாய்க்கிழமைகளில் திருப்பி செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் உங்களது கடன் சுமையானது விரைவில் குறையும்.
மார்க்கண்டேயர் தனது கடனை அடைப்பதற்காக சிவனை வேண்டி தரிசித்த இடம் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் திருவாரூர் செல்லும் வழியில் திருசேறை உடையார் சிவன் கோவில் தான். அந்த தளத்தில் மார்க்கண்டேயர் பிரார்த்தனை செய்தார். அதன் பலனாக மார்க்கண்டேயர் கடனும் அடைந்தது. அவருடைய பிறவி கடனையும் சிவபெருமான் அடைத்தார். மேலும், மார்க்கண்டேயரின் வாழ்நாள் ஆனது 16 வயது வரை மட்டுமே இருந்தது. அதனை நிவர்த்தி செய்து என்றும் பதினாறு வயதுடைய நித்திய சிரஞ்சீவியாக வாழும்படி மார்க்கண்டேயருக்கு ஈசன் அருள் பாலித்தார்.
திங்கட்கிழமைகளில் இத்தலத்திற்கு வந்து சிவனுக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் நீங்கள் முற்பிறவியில் வாங்கிய கடனும் தற்போது இந்த பிறவியில் வாங்கிய கடனும் தீரும் என்பது நம்பிக்கை.
கடன் என்பது வசதிபடைத்தவர்கள், வசதி இல்லாதவர்கள் என அனைவரும் வாங்கும் ஒன்றாகிவிட்டது. அதை தவிர்த்து நமது வருமானத்திற்கு ஏற்ற செலவுகளை அத்தியாவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டு சேமித்து வைத்த பணத்தில் நிம்மதியாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். இதனால் எப்போதும் நிம்மதியான உறக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கையும் நமக்கு கிடைக்கும்.