திருவாரூர் மாவட்டம் என்கண் எனும் இடத்தில் இந்த கோயில் உள்ளது. சிவன் கோவிலாக இருந்தாலும் இந்த கோவிலில் முருகனுக்கு தான் தனிச் சிறப்பு உண்டு. அந்த சிறப்புக்கு என்று தனி வரலாறு உண்டு. நாம் மிகவும் கேட்டு பழகிய அந்த புராண வரலாறு இந்த தலத்தில் தான் நிகழ்ந்தது.
பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை படைக்கும் தொழிலைச் செய்துவரும் பிரம்மன் மறந்து விட்டார். அந்த சமயம் முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை பிரம்மனிடம் கேட்க அவருக்கு தெரியவில்லை. உடனே மந்திரத்திற்கான அர்த்தம் தெரியாமல் படைக்கும் தொழிலை பிரம்மன் செய்யக்கூடாது என முடிவெடுத்து. அந்த நேரம் முருக பெருமான்தான் படைக்கும் தொழிலைச் செய்து வந்தார். பிரமண்ணை சிறையிலும் அடைத்தார்.
சிறையில் இருந்த பிரம்மன் சிவனை நோக்கி அந்த தலத்தில் வழிபட தொடங்கினார். மீண்டும் படைக்கும் தொழிலை தன்னிடம் வழங்க வேண்டி சிவபெருமானை வழிபட்டார். உடனே சிவபெருமான் பிரம்மன் முன் தோன்றி, மீண்டும் பிரம்மன் படைக்கும் தொழிலைச் செய்ய அனுமதிக்க வேண்டுமென முருகப்பெருமானிடம் கூறினார். ஆனால், முருகன் மறுத்து விட்டார். பிறகு பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை முருகன் பிரம்மனிடம் கற்பித்து. பின்னர் படைக்கும் தொழிலை பிரம்மனிடம் ஒப்படைக்குமாறு சிவபெருமான் கூறினார்.
அதனால் இத்தலத்தில் முருகன் உற்சவராக காட்சியளிக்கிறார். வியாழக்கிழமை தோறும் இந்த கோவிலில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி விரதமிருந்து வழிபட்டால் குரு தோஷம் நீங்கும். மாணவர்களின் கல்வி தடைகள் நீங்கும். மேலும், கண் பிரச்சினை உள்ளவர்கள் இங்குள்ள சிவனை வழிபட்டு வந்தால் கண்நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
இதுபோக செவ்வாய்க் கிழமைகளில் இங்குள்ள முருகனை தரிசித்து வந்தால் உடல் சம்பந்தமான எந்த பிரச்சனையும் அண்டாது என்பது ஐதீகம். மேலும், இத்தலத்தில் வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும், வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் என பல நம்பிக்கைகள் உள்ளன.
பிரம்மனுக்கு நான்கு தலைகள் உண்டு, எட்டு கண்கள் உண்டு. பிரம்மன் இங்கு சிவனை வழிபட்டதால் இந்த ஊருக்கு என்கண் என பெயர் உண்டு. மேலும், இந்த ஊருக்கு பிரம்மபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…