மருந்து வாங்க கடைகளுக்கு செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் – திவ்யா சத்யராஜ்.!
மக்கள் மருந்துகள் வாங்க செல்லும் போது மருந்தின் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது அவசியம் என்று திவ்யா சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா காரணமாக 2 மாதங்கள் கழித்து சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் அவர்களின் மகளான திவ்யா மருந்துகள் வாங்க செல்பவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்றும், ‘அக்ஷயபாத்ரா’ என்ற உலகின் மிகப் பெரிய மதிய உணவு திட்டத்தின் தூதராகவும், வேல்ட் விஷன் என்ற அமைப்புடன் இணைந்து கிராமப்புறத்தில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்க பல முயற்சிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மருந்து கடைகளில் மருந்துகளை வாங்க செல்கின்ற போது கடைபிடிக்க வேண்டியவற்றை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வர வேண்டிய மருந்துகள் வராது. எனவே கடைகளில் பழைய மருந்துகள் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே மக்கள் அனைவரும் மருந்து வாங்க செல்கின்ற போது மருந்துகளின் காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்கும் பார் பவுடர், பேபி ஆயில், க்ரீம் உள்ளிட்டவைகளை கவனமாக பார்த்து வாங்குவது அவசியம். காலாவதியான மருந்துகளை மருந்துகளை பயன்படுத்துவது உடலுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார். மேலும் மருந்து கடைகளை வைத்திருப்பவர்கள் அனைவரும் தயவு செய்து காலாவதியான மருந்துகளை உடனடியாக மாற்ற வேண்டும். ஏனெனில் மருந்து வாங்க வரும் ஒவ்வொருவரும் உங்களிடமிருந்து வாங்கும் மருந்துகள் அவர்களை குணப்படுத்தும் என்று நம்பி வாங்குகிறார்கள். எனவே காலாவதியான மருந்துகளை டிஸ்போஸ் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.