தினம் ஒரு திருவெம்பாவை

Default Image
  • மார்கழி மாதத்தில் இறைவனே நீயே கதி என்று அவனை சரணாகதி அடைந்து துதிக்கும் ஒரு மாதமாக திகழ்கிறது.
  • இம்மாதத்தில் நாயன்மார்களில் ஒருவராகிய மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்களையும் அதன் பொருளையும் அறிவது மட்டுமல்லாமல் அதனை பாடி எங்கும் சிவம் எதிலும் சிவம் என்பார்கள் அப்படி சிவனை நினைத்து அவர் அருள் பெறுவோம்.

திருவெம்பாவை

பாடல் 2 :

பாசம்  பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்

பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்! நேரிழையீர்!

சீசி இவையுஞ் சிலவோ? விளையாடி

ஏசும் இடமீதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றலம்பலத்துள்

ஈசனார்க் கன்பார்? யாம் ஆரேலோர் எம்பவாய்!

பாடல் விளக்கம் :

எழும்புவர் சிறந்த அணிகளையுடைய பெண்ணே இரவும் பகலும் நாம்பேசும் போதெல்லாம் யாவும்கடந்து நிற்கின்ற ஒளி வடிவினனாகிய இறைவனுக்கே என் அன்பு என்று சொல்வாய் அந்த அன்பை இந்த மலர்ப்படுக்கையின் மீது எப்போது வைத்தாய்!உள்ளே இருப்பவள் சிறந்த அணிகலன்களை நான் மட்டும் அணிந்திருக்கவில்லை! நீங்களும் தாம் அணிந்திருக்கின்றீர்கள் தோழிகளே! சீ சீ! நீங்கள் பேசிய இவை கொஞ்சமா? விளையாடி ஏசிக் கொள்ளும் இடம் இதுவா?

எழுப்புவர் : தேவர்களும் வணங்குவதற்கு அரிதாகிய அவர்கள் தங்கள் நிலைமைக்கு இரங்கிக் கூச்சப்படுகின்றவாறு உள்ளவை அவன் திருவடிகள் ஒளிமயமான அவன் அந்தத் திருவடிகள் இந்த மண்ணில் படும்படி வந்தருளி நாம் காணுமாறு தந்தருள்வான்.அவன் சிவலோகன்,திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருப்பன்.நாம் யார்?அவன் அடிமைகளே!

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்