திருவெம்பாவை
பாடல் : 4
ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ?
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே!
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்!
– மாணிக்கவாசகர்-
பாடல் விளக்கம் :-
ஒளி பொருந்திய முத்தினைப் போன்ற பற்களை உடையவளே இன்னும் பொழுது விடியவில்லையா?அழகிய கிளிபோல மொழி பேசும் நம் தோழியர் அனைவரும் வந்து விட்டனரோ!எண்ணிப் பார்த்து உள்ளப்படியே உரைக்கின்றோம்;ஆனால் நேரமாகும் அதுவரையில் கண் உறங்கிக் காலத்தை வீணாக்காதே!தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதமானவனை , மறைகள் பேசுகின்ற மேலான பொருளை,கண்களுக்கு இனியவனைப் பாடி மனம் கசிந்து , உள்ளம் உடைந்து நின்று உருகுகின்றோம் ஆதலால் நாங்கள் எண்ணிக் கூற இயலாதவர்களானோம். நீயே வந்து எண்ணிக் கொள்! எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய் உறங்கு!
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…