தினம் ஒரு திருவெம்பாவை – பாடுங்கள்

Default Image
  • மார்கழி மாதத்தில் பாட வேண்டிய பதிகம் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை
  • திருவெம்பாவையின் பாடல் மற்றும் அவற்றின் பொருள் அறிந்து பாடுவோம்.

திருவெம்பாவை

பாடல் : 4

ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?

வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ?

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே!

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உள்நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து

எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்!

– மாணிக்கவாசகர்-

பாடல் விளக்கம் :-

ஒளி பொருந்திய முத்தினைப் போன்ற பற்களை உடையவளே இன்னும் பொழுது விடியவில்லையா?அழகிய கிளிபோல மொழி பேசும் நம் தோழியர் அனைவரும் வந்து விட்டனரோ!எண்ணிப் பார்த்து உள்ளப்படியே உரைக்கின்றோம்;ஆனால் நேரமாகும் அதுவரையில் கண் உறங்கிக் காலத்தை வீணாக்காதே!தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதமானவனை , மறைகள் பேசுகின்ற மேலான பொருளை,கண்களுக்கு இனியவனைப் பாடி மனம் கசிந்து , உள்ளம் உடைந்து  நின்று உருகுகின்றோம் ஆதலால் நாங்கள் எண்ணிக் கூற இயலாதவர்களானோம். நீயே வந்து எண்ணிக் கொள்! எண்ணிக்கை  குறைந்தால் மீண்டும் போய் உறங்கு!

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi