தினம் ஒரு திருப்பாவை

- மார்கழியில் மிகவும் சிறப்பு பெற்றது என்றால் அது ஆண்டாள் அருளிய திருப்பாவை
- தினம் ஒரு திருப்பாவையின் இன்றைய தொடர்ச்சி பாடலையும் அதன் பொருளையும் அறிந்து கொள்வோம்.
திருப்பாவை
பாடல் :12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தா நெழுந்திராவ் , ஈதென்ன பெருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
– ஸ்ரீ ஆண்டாள் –
பாடல் விளக்கம் :
இளங்கன்றினையுடைய எருமைகள் கனைத்து, தம் கன்றின் மீது இரக்கம் கொண்டு கன்றை நினைத்து நின்று,தம் முலை வழியாகப் பால் சொரிந்து நனைத்து வீட்டைச் சேறாக்குகின்றன அத்தகைய எருமைகளை உடைய நல்ல செல்வனுடைய தங்கையே!மார்கழி மாதப் பனி எங்கள் தலையிலே விழ,உன் வீட்டுக் கடைவாசலில் நிற்கின்றோம்,தென்னிலங்கை வேந்தனாகிய இராவணனை கோபத்தினால் அழித்த நெஞ்சிற்கினியவனான இராமபிரானை நாங்கள் பாடுகின்றோம் கதவைத்திற! இது ர்ன்ன உறக்கம்? நாங்கள் உன்னை இப்படி அழைப்பது எல்லா வீட்டாருக்கும் தெரிந்து விட்டது! இனியாவது எழுந்து வா! என்று அருளுகிறார் ஆண்டாள்.