திருப்பாவை
பாடல் : 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ, வாசல் திறவாதர்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்; பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தேற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்த லுடையதாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.
-ஸ்ரீ ஆண்டாள்-
பாடல் விளக்கம்:
விரதமிருந்து சுவர்க்கம் போகின்ற அம்மையே! வாசற் கதவைத் திறக்கதவராயினும் பதிலுங்கூடவா சொல்ல மாட்டார்கள்? மணக்கின்ற துளசி மாலையை திருமுடியில் அணிந்த நாராயணன், நம்மால் போற்றத்தக்க நம் நோன்புப் பரிசான பேரின்பத்தை நல்குவான்;புண்ணிய மூர்த்தியாகிய இராமபிரானால் முன்னொரு காலத்தில் எமன் வாயிலே போய் விழுந்த கும்பகரணன் உறங்கும் போட்டியில் உனக்குத் தோல்வியடைந்து அவனுடைய பேருக்கத்தை உனக்குத் தந்தானா? ஆழ்ந்த உறக்கமுடையவளே! பெறற்கரிய ஆபரணம் போன்றவளே! உறக்கம் தெளிந்து வந்து கதவைத் திற! என்று அருளிகிறார் ஆண்டாள்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…